விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
    அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 
    தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - கண்ணனாகப் பிறந்த அக்காலத்து
பேய்ச்சி - பூதனையினுடைய
விடம் - (முலையில் தடவியிருந்த) விஷத்தை
பருகு - பானம்பண்ணின
வித்தகனை - ஆச்சரீயபூதனும்

விளக்க உரை

“பிரமன் சிவன் இந்திரன் சந்திரன் முதலிய தெய்வங்களெல்லாம் நாராயணனே” என்று சாஸ்த்ரத்திற் பலவிடங்களிற் சொல்லப்பட்டுள்ளது; அவ்விடங்களை எப்படி நிர்வஹிக்க வேணுமென்றால்; ‘பிரமன் முதலிய தெய்வங்களைச் சரீரமாகக் கொண்ட ஸர்வ சரீரியான ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே’ என்று சொல்லிற்றாக நிர்வஹிக்கவேணும்; தெய்வங்கள் பலபலவுள்ளவனாக எவ்விடங்களிற் சொல்லப்பட்டுள்ளதோ, அவ்விடங்களில், ஸர்வசரீரியான ஸ்ரீமந்நாராயணனிற்காட்டில் சரீரங்களான தெய்வங்களுக்கு உள்ள ஸ்வரூபபேதம் சொல்லப்படுவதாக நிர்வஹிக்கவேணும்- என்கிற இந்த அர்த்தம் இப்பாட்டில் முதலடியாற் காட்டப்பட்டதாகக் கொள்க. பிரமன் சிவன் முதலிய தெய்வங்களைத் தனிப்படவும் நிறுத்தினது ஏதுக்காகவென்னில், ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் முதலிய சில லோகயாபாரங்கள் நடை பெறுவதற்காக வென்பார் “உலகுய்ய என்கிறார்.

English Translation

To protect the three worlds, he takes these forms and remains apart from them. In the yore, he sucked the ogress putana’s poisoned breast. He played with calves, and grazed them in upland forest, teaching them to drink water from the lakes. He is the cloud hued one worshipped in Tanjai Maamanikkoil surrounded by groves. He will come as Kalki riding a horse to protect the world. Li have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்