விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிண்கிணி கட்டிக்*  கிறி கட்டிக் கையினிற்*
    கங்கணம் இட்டுக்*  கழுத்திற் தொடர் கட்டித்* 
    தன் கணத்தாலே*  சதிரா நடந்து வந்து*
    என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் கண்ணன் - என் கண்ணபிரான்;
கிண்கிணி - அரைச்சதங்கையை;
கட்டி - கட்டிக்கொண்டும்;
கிறி - சிறுப்பவள வடத்தை;
கையினிலே - கையிலே;

விளக்க உரை

கங்கணம் - வடசொல். திருவாபரணங்களைச் சொல்லும் ப்ரகரணமாதலால் சொல்லப்படாதொழிந்த திருவாபரணங்களையுங் கூட்டித் ‘தம்ணம்’ என்றது. கணம் - ???? என்ற வடசொல் திரிபு. தன் கணத்தாலே என்று பாடங்கொண்டு தன்னுடைய கண்ணால் (என்னைக் கடாக்ஷித்துக் கொண்டு) னினுமமையும்; இப்பொருளில் ‘கண்’ என்பது - மூன்றாம் வேற்றுமையுருபை ஏற்கும்போது அத்துச்சாரியை பெற்று வந்ததென வேண்டும்.

English Translation

Wearing bells on his ankles, bracelet on his wrist, bangles on his hands, choker on his neck, and heaps more, my beloved one will come stealthily from behind and embrace me from behind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்