விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
    கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 
    ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
    மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதத்தை - வேதஸ்வரூபியானவனும்
சுவை - அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி
வேதத்தின் பயனை - வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருமங்களின் பலன்களைக் கொடுப்பவனும்
விழுமிய முனிவர் விழுங்கும் - சிறந்த முனிவர்களால் அநுபவிக்கப்படுகிற
கோது இல் இன் கனியை - கோதற்ற போக்யமான பழம் போன்றவனும்

விளக்க உரை

எம்பெருமானை ஸாக்ஷாத் வேதமாகச் சொன்னது-வேத ப்ரதிபாத்யனா யிருக்குந் தன்மைபற்றியாதல், வேதங்களை வெளியிட்டருளினமை பற்றியாதல். உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொருவகையாக இருக்குமாதலால் அவரவர்களுடைய விருப்பத்திற் கிணங்க உபாயங்களையும் பலன்களையும் வேதமூலமாகக் காட்டிக் கொடுத்திருக்கின்றமைபற்றி வேதத்தின் சுவைப்பயனை எனப்பட்டது. வ்யாஸர் பராசரர் வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே மிகவும் போக்யனாயிருப்பதுபற்றி விழுமிய முனிவர் விழுங்குந் கோதிலின் கனியை எனப்பட்டது.

English Translation

The Lord of the Vedas, the purpose of Vedic sacrifice, the perfectly sweet fruit enjoyed by the seers, the elephant of Nandagopala, the first-cause worshipped by earthlings, my Lord and Master, resides in Mayilai with women of matchless beauty. I have seen Him in Tiruvallikkeni.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்