விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்*  சிலர் பேசக் கேட்டிருந்தே* 
    என் நெஞ்சம் என்பாய்!*  எனக்கு ஒன்று சொல்லாதே* 
    வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி*  வேங்கட மலை கோயில் மேவிய* 
    ஆயர் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரியன் என்பதும் - கைக்கு எட்டாதவனை எப்படி தொழுவது? என்று சொல்லுவதுமாய் (ஆக இப்படியெல்லாம்)
சிலர் பேச - சில துர்ப்பாக்கியசாலிகள் பேசாநிற்க,
என் நெஞ்சம் என்பாய் - ஓ மனமே!
கேட்டிருந்தே - (அந்த குத்ஸிதவாதங்களை நீ) ;கேட்டு வைத்தும்

விளக்க உரை

சேயன், அணியன், சிறியன், பெரியன்” என்கிற வார்த்தைகள் பகவத் விஷயத்தில் இழியமாட்டாத ஸம்ஸாரிகள் சொல்லும் வார்த்தைகளாம்; பரவாஸூதேவன் எட்டாநிலத்திலே உள்ளவனாகையாலே வெகு தூரஸ்தனான அவனை ஆச்ரயிக்கப் போகாது என்பர் சிலர்; அர்ச்சாவதாரங்கள் ஸமீபத்திலுள்ளவை யாகையாலே அலக்ஷியம் தோற்றப் பேசுவர் சிலர்; ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்களில் ஸௌலப்ய குணத்தில் ஈடுபடாதே சிறுமைகளைச் சொல்லி ஏசுவர் சிலர்; வியூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் உபாஸிக்கச் சொன்னால் நெஞ்சுக்கு மெட்டாத அப்பெரிய வுருவை எப்படி உபாஸிப்பதென்று சொல்லி யொழிவர் சிலர்; ஆக விப்படி அவரவர்கள் மனம்போனபடி பேசி பகவத் விஷயத்தில் அவகாஹிக்க மாட்டாதே ஸம்ஸாரிகளாய் உண்டுடுத்துத் திரியாநிற்கக் காண்கிறோம். எம்பெருமானுடைய சேய்மைமையக் சிலர் குற்றமாகக் கூறுவர்; அவனுடைய அண்மையைச் சிலர் குற்றமாகக் கூறுவர்; அவனுடைய பெருமையைச் சிலர் குற்றமாகக் கூறுவர்; ஆகவே அவனுடைய குணங்களெல்லாம் இகழ்ச்சிக்கு உறுப்பாகிக் கிடக்கும்போது, அப்படி இகழ்வாருடைய திரளில் புகாதே நெஞ்சே! நீ என்னோடும் ஒரு வார்த்தை சொல்லாதே திடீரென்று திருவேங்கமுடையான் விஷயத்தில் அடிமைத் தொழில்பூண்டு நின்றாயே! என்று உகந்து பேசினாராய்த்து.

English Translation

O Heart! You have heard our Lord being spoken of as the one afar, and the one near, the big one, and the small one. The cowherd-Lord resides in Venkatam hills. His temple is surrounded by bamboo thickets which spill white pearls without a word. Today you too have entered into his service.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்