விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ட கடலும்*  மலையும் உலகு ஏழும்*  
    முண்டத்துக்கு ஆற்றா*  முகில்வண்ணா ஓ!  என்று* 
    இண்டைச் சடைமுடி*  ஈசன் இரக்கொள்ள*  
    மண்டை நிறைத்தானே!  அச்சோ அச்சோ*
     மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ட - கண்ணாற்கண்ட;
கடலும் - ஸமுத்ரங்களும்;
மலையும் - மலைகளும்;
உலகு ஏழும் - கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்);
முண்டத்துக்கு - (என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு;

விளக்க உரை

மஹாப்ரயாஸங்கள் பட்டும் நிறைக்கமுடியாத ப்ரஹ்மகபாலத்தின் தன்மையைக் காட்டிற்று -முதலிரண்டடி. ஓஒ - ஓ என்னும் இரக்கக் குறிப்பிடைச் சொல் அளபெடுத்து வந்தது. இனி கண்டகடலிலும் மலைகளிலும் உலகேழிலும் (திரிந்தும்) முண்டத்துக்கு ஆற்றா என்றுமாம். உண்டத்துக்கு ஆற்றா என்றெடுத்து (எங்கே திரிந்தும் மிக வருந்தியும்) கபாலத்திற்கு வேண்டிய உணவையிடுதற்கு முடியாமல் ஈசன் முகில் வண்ணா ஓஒ என்று இரக்கொள்ள என்றும் உரைக்கலாம். முண்டத்துக்கு என்ற பாடத்தில் மூன்றாஞ் சீரோடு உண்டத்துக்கு என்ற பாடத்தில் இறுதிச் சீரோடும் மோனைத் தொடர் காண்க. இரக்கொள்ள = இர - முதனிலைத் தொழிற்பெயர்.

English Translation

O Lord with the Srivatsa mark on your chest! When the mat-haired Siva came begging and said, “All the seven continents, the seven oceans and seven mountains cannot fill my skull begging-bowl, O Cloud hued Lord,” you filled his skull, come Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்