விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்தாய் என் மனம் புகுந்தாய்*  மன்னி நின்றாய்* 
    நந்தாத கொழுஞ் சுடரே*  எங்கள் நம்பீ!* 
    சிந்தாமணியே*  திருவேங்கடம் மேய எந்தாய்!*
    இனி யான் உனை*  என்றும் விடேனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நந்தாத - ஒருகாலும் அணையாத
கொழு சுடரே - சிறந்த தேஜஸ்ஸாயிருப்பவனே!
எங்கள் நம்பீ - எங்களுடைய குறையை நிரப்பவல்ல பூர்ணனே!
சிந்தாமணியே - நினைத்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் கொடுத்தருள வல்லவனே!
திருவேங்கடம் மேய எந்தாய் - திருமலையிலெழுந்தருளியிருக்கும் பெருமானே

விளக்க உரை

தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னிநின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லிவிடலாமாயினும் தம்முடைய ஆநந்தம் நன்கு விளங்குமாறு “வந்தாய்-என் மனம் புகுந்தாய்-மன்னி நின்றாய்” என்று தனித்தனி வாக்கியமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார். வந்தாய்-பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய். என்மனம் புகுந்தாய்-வந்தவிடத்திலும் ஜ்ஞாநாநுஷ்டாநங்களிற் சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடியோடாமல் நாயினேனுடைய மனத்தைத் தேடிப்பிடித்து வந்து புகுந்தாய். மன்னிநின்றாய்- ‘இனிய இடங்களிலே நாம் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டுக் கிடப்பானேன்’ என்று வெறுத்து நெஞ்சைவிட்டு நீங்கப்பாராமல் ‘இதனில் சிறந்த ஸ்தாநம் வேறொன்று நமக்கில்லை’ என்று கொண்டு என்னெஞ்சிலேயே ஸ்திரப்ரதிஷ்டையாக இருந்துவிட்டாய்.

English Translation

O Lord, source of eternal light, our master, wish gem, Resident of Venkatam hills! You came, entered my heart, and conquered it. Now I shall never let you go.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்