விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூண் ஆய் அதனூடு*  அரியாய் வந்து தோன்றி* 
    பேணா அவுணன் உடலம்*  பிளந்திட்டாய்!* 
    சேண் ஆர் திருவேங்கட*  மா மலை மேய,* 
    கோள் நாகணையாய்!*  குறிக்கொள் எனை நீயே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தூணாயதனூடு - வெறும் தூணாகவேயிருக் கிறவதற்குள்ளே
அரி ஆய் - நரஸிம்ஹமாகி
வந்து தோன்றி - திருவவதரித்து,
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் - (தன்னை) மதியாத ஹிரண்ய கசிபுவின் சரீரத்தைக் கிழித்துப் போகட்டவனே!
சேண் ஆர் - மிக்க உயர்த்தி பொருந்திய

விளக்க உரை

பக்தர்களின் சத்துருக்களிடத்தில் சீற்றமும், பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமும் விளங்கத் திருமலையிலே ஸேவை ஸாதிக்கிறபடியைப் பேசுகிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுக்கனான ப்ரஹலாதாழ்வானுக்கு அருள் செய்தாப்போலே அடியேன்மீதும் அருள் செய்யவேணுமென்கிறார்.

English Translation

O Serpent-reclining Lord, Resident of Venkatam hills rising high! You appeared as a man-lion froin out of a pillar, and split the mig’hty chest of the haughty Hiranya. Pray take notice of me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்