விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோற்றேன் பல் பிறவி*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்* 
    ஏற்றேன் இப் பிறப்பே*  இடர் உற்றனன்-எம் பெருமான்!* 
    கோல் தேன் பாய்ந்து ஒழுகும்*  குளிர் சோலை சூழ் வேங்கடவா!* 
    ஆற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோல் தேன் பாய்ந்து ஒழுகும் - கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற
குளிர் சோலை சூழ் வேங்கடவா - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே!
எம்பெருமான் - அஸ்மத் ஸ்வாமியே!,
பல் பிறவி நோற்றேன் - எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன்.

விளக்க உரை

“உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, ‘உன்னை ஸேவிக்க வேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப் போயிற்றே யென்று இடருற்றேன்-என்றும் உரைப்பர்.

English Translation

I have gone through many lives. In this life I became ready to atone for my unbearable. Karmic past; because of my desire to see you. O Lord of Tiruvenkatam hills, with cool groves where beehives on branches overflow with honey! I have come to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்