விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்பரம் அனல் கால் நிலம் சலம்*  ஆகி நின்ற அமரர்கோன்* 
    வம்பு உலாம் மலர்மேல்*  மலி மட மங்கை தன் கொழுநன்அவன்* 
    கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்*  நீள் இதணம்தொறும்* 
    செம் புனம் அவை காவல் கொள்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற - ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்
அமரர் கோன் - நித்ய ஸூரிகட்குத் தலைவனும்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன் - பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன் அவன் - நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,
நீள் இதணம் தொறும் - உயர்ந்த பரண்கள் தோறும்

விளக்க உரை

English Translation

He is manifest in Earth, Water, Fire, Wind and space. He is the king of gods, the bee-humming lotus dame Lakshmi’s spouse. Thin waisted gypsy women sit on lofts in the treetops and watch over the tracts of red soil in Tiruvenkatam,- thitherward, o Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்