விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாறிய சாந்தம்*  நமக்கு இறை நல்கு என்னத்*
    தேறி அவளும்*  திருவுடம்பிற் பூச*
    ஊறிய கூனினை*   உள்ளே ஒடுங்க*  அன்று_
    ஏற உருவினாய்!  அச்சோ அச்சோ* 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாறிய - ‘நல்லவாசனை வீசுகின்ற;
சாந்தம் - சந்தனத்தை;
நமக்கு - எங்களுக்கு;
இறை - கொஞ்சம்;
நல்கு என்ன - கொடு என்று (நீ) கூனியைக் கேட்க;

விளக்க உரை

அக்ரூரன் கம்ஸனது கட்டளையினாலே கண்ணபிரானை மதுரைக்கழைக்க கண்ணன் கம்ஸனைக் கொல்ல நினைத்துப் பலராமனுடன் புறப்பட்டு மதுரையிற் புகுந்து நடுவழியில் ஒரு துஷ்ட வண்ணானைக் கொன்று அவனிடமிருந்த சிறந்த ஆடைகளை யெடுத்துச் சாத்திக்கொண்டு ராஜவீதியில் எழுந்தருளுகிற வளவிலே சந்தநத்தைக் கையிலேந்தி வருகிற கூனி யொருத்தியைக் கண்டு ‘அம்மே! நமக்கும் நம் அண்ணர்க்கும் பூசலராம்படி சந்தகம் கொடுக்க வல்லையோ?’ என்று கேட்க அவளும் கண்ணபிரான் திருக்கண்களால் மனமிழுப்புண்டு மறுக்கமாட்டாமல் ‘வெண்ணெயிலே பழகிய இவர்கள் சந்தநத்தின் வாசி அறிவார்களோ’ என்று மட்டமான சந்தநங்களைக் காட்ட அவற்றுக்கெல்லாம் ஒவ்வொருகுறை சொல்லிக்கழித்து ‘அண்ணருடம்புக்கும் நம்முடம்புக்கும் ஏற்ற வெகுநேர்த்தியான வாஸனையுடைய சந்தநத்தில் சிறிது தாம் என்று விரும்பிச்சொல்ல அவளும் இவன் சந்தநத்தின் வாசியறிந்தபடியையும் விரும்பின சீர்மையையும் வடிவழகையும் கண்டு மகிழ்ந்து ‘கம்ஸனுக்குக் கொண்டு போகிற இதை இவர்களுக்குத் தந்தால் தண்டனை நேருமே’ என்றும் அஞ்சாமல் உள்ளந்தேறி உத்தமமான சந்தனத்தை யெடுத்து ‘இதைத் திருவுள்ளம்பற்றுங்கள்’ என்று ஆதரத்தோடு ஸமர்ப்பிக்க அப்பூச்சைத் திருமேனியிலணிந்து கொண்ட கண்ணபிரான் இவள் ‘அநந்யப்பிரயோஜகமாய்க் கிஞ்சித்தரித்தாள்’ என்று உகந்து அவள் முதுகில் வேர்விழுந்ததோ வென்னும்படி உறைத்துக் கிடந்த கூனை நிமிர்த்துவிடக் கடவோமென்று திருவுள்ளம்பற்றி நடுவிரலும் அதற்கு முன்விரலும் கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையிற் பிடித்துத் தன் திருவடிகளினால் அவள் கால்களை அமுக்கியிழுத்துத் தூக்கிக் கூன் சரீரத்துக்குள் அங்கி விடும்படி கோணல் நிமிர்த்தி அவளை மகளிரிற் சிறந்த உருவினளாக்கினனென்ற வரலாறு காண்க.

English Translation

My Lord, you asked for some Sandal paste from a hunch-back woman; she too obliged and smeard it on you. In return you removed her hunch and straightened her back. Come Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்